;
Athirady Tamil News

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் இளைஞர் கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு

0

புதுச்சேரி: புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி நேற்று முன்தினம் அறிவித்தார். மே 5-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி முத்​தி​யால்​பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2-ம் தேதி வீட்​டின் அருகே விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென மாயமா​னார்.

2 நாட்​களுக்​குப்பின் அருகே உள்ள வாய்க்​காலில் கை, கால்​கள் கட்​டப்​பட்டு போர்​வை​யால் சுற்​றப்​பட்​ட நிலையில், பிண​மாக மீட்​கப்​பட்​டார். இச்​சம்​பவம் புதுச்​சேரியை உலுக்​கியது.

முத்​தி​யால்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, அதே பகு​தி​யைச் சேர்ந்த காக்கா என்ற கருணாஸ் (19), விவே​கானந்​தன் (59) ஆகியோரை போக்சோ வழக்​கில் கைது செய்​தனர். இவ்​வழக்கு தொடர்​பாக 540 பக்க குற்​றப்​பத்​திரி​கையை போலீ​ஸார் தாக்​கல் செய்​தனர்.

ஒருவர் தற்கொலை

இதில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த விவே​கானந்​தன் கடந்​த 2024 செப்​டம்​பரில் கழி​வறை​யில் தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார். தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதி​மன்​றத்​தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

விசா​ரணை முடிந்த நிலை​யில் நேற்று இந்த வழக்​கில் தீர்ப்பு வழங்​கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என தீர்ப்பளித்தார். மே 5-ம் தேதிஇரு தரப்பு வாதத்துக்குப் பிறகு தண்டனை விவரத்தை அறிவிப்ப தாகவும் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறியதாவது: இந்திய தண்டனை சட்டம் 366 வது பிரிவில் பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், 342-வது பிரிவில் குழந்தையை அடைத்து வைத்தல், 302-வது பிரிவான கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் குற்றம்சாட்டப் பட்ட கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் மரண தண்டனைக்கான குற்றங்களுக்கான பிரிவுகள் இருக்கின்றன. அரசு தரப்பில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் தீர்வு என வாதங்கள் வைத்துள்ளோம். இருதரப்பு வாதங்கள் கடந்த 15 முதல் 17 -ம் தேதி வரை நடந்தது.

இவ்வழக்கில் புதுச்சேரி வழக்கறிஞர்கள் எதிர்தரப்புக்கு ஆஜராகவில்லை. சிறுமியை தங்கள் வீட்டு குழந்தையாக புதுச்சேரி வழக்கறிஞர்கள் பார்த்தனர். இலவச சட்ட உதவி மையம் மூலம் விழுப்புரம் வழக்கறிஞரை குற்றம் சாட்டப்பட்டோர் தரப்புக்காக நீதிமன்றம் நியமித்தது.

ஆவணங்கள், சான்றுகள்…

81 ஆதார ஆவணங்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் செருப்பு, ஆடை, முடி, கைப்பற்றப்பட்ட உயிரி மாதிரிகள், டிஎன்ஏவிவரங்கள் என 37 சான்று பொருட்களாக சமர்ப்பித்தோம்.

இவ்வழக்கில் 54 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட விவேகானந்தன் தற்கொலை செய்ததால் அவர் மீது இவ்வழக்கில் இருந்த எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் குற்றம் சாட்டப்பட்டோர் செல்போனில் ஆபாச வீடியோக்கள், உயிர் மாதிரிகள் கிடைத்தன. முக்கிய வழக்குகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகளில் கூட்டு பாலியல் பலாத்காரம், குழந்தை இறப்பு , குழந்தை 12 வயதுக்கு கீழ் இருப்பது ஆகிய மூன்று முக்கியக் குற்றங்கள் அடிப்படையில் இவ்வழக்கு தண்டனைகள் இருக்கின்றன.

அதனால் தண்டனையை உடன் அறிவிக்க இயலாது என்ற நிலை இருக்கிறது. வழக்குகளில் குற்றவாளி தீர்ப்பு வந்த பிறகு தண்டனையைக் குறைக்க குற்றவாளி தரப்பும், அதிகபட்ச தண்டனை தர அரசு தரப்பும் மே 5-ல் வாதம் செய்யவுள்ளனர். அதன்பிறகுதான் தண்டனை விவரம் அறிவிக்கப்படும்’’ என்றார்.

இவ்வழக்கு தீர்ப்பையொட்டி சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் நீதிமன்றம் வந்திருந்தனர். நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.