;
Athirady Tamil News

அச்சுவேலியில் தொடரும் வழிப்பறி ; நேற்றும் மூன்று பெண்களிடம் கத்தி முனையில் வழிப்பறி!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது…

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படை சிப்பாயின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கண்டியை சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (வயது 34) எனும் சிப்பாய்யே சடலமாக மீட்டப்பட்டுள்ளார்.…

தாமதமாக கட்டணம் செலுத்துவோருக்கு அதிர்ச்சி!!

நீர் கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் செய்யும் அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் தாமதக் கட்டணத்தை அறவிட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தாமதக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக…

தேர்தலுக்காகவே என்னை கைது செய்தார்கள் !!

தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவே, ​கோட்டா தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 7 மாதங்கள் தடுத்து வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது ​தொடர்பில் டுவிட் செய்துள்ள ரிஷாட்,…

வடமாகாண மக்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான செய்தி !!!

வடமாகாணத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சஃபாரி சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை தேர்ந்தெடுக்குமாறு விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை…

அமெரிக்காவின் முன்னாள் கண்காணிப்பு கப்பல் கொழும்பில்… !!

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும் என…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் ரிஷாட் விடுதலை !!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்​தேகநப​ராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை…

சுயாதீன ஊடகவியலாளர் ரமேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு; இறுதி கிரியைகள் நாளை!!

சமூக பணியாளரும் , சுயாதீன ஊடகவியலாளருமான செல்வராசா ரமேஸ் (வயது 53) மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இறுதி…

புங்குடுதீவு உலகமையத்தின் ஏற்பட்டில் மாணவிகள் கௌரவிப்பு நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

யாழ்/புங்குடுதீவு மத்திய கல்லூரியில் மாகாணமட்ட மகளிர் உதைபந்தாட்டப்போட்டியில் 2ஆவது இடத்தைப்பெற்று தேசியமட்டப்போட்டிக்குத் தெரிவாகிய வீராங்கனைகளையும் , செம்பு நடனப்போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாவது இடத்தைப்பெற்று சாதனை படைத்த…

யாழில். வீடொன்று சேதம் ; 37 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடரும் மழை காரணமாக வீடொன்று சேதமடைந்துள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசித்து வந்த வீடொன்றே தொடர் மழை காரணமாக பகுதிகளவில்…

நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்!!

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்குள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட திருட்டு குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த தப்பிஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 06 ஆம் வட்டாரம்…

மழை நிலைமை மேலும் தொடரும்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார் . நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது !!

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி…

போராட்ட விவகாரம்: சட்டமா அதிபரின் அனுமதி வேண்டும் !!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 97 (1) பிரிவுக்கு அமைய சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம அறிவித்ததையடுத்து, அழைப்பாணையை வாபஸ் பெறுமாறு…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை !!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபரொருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, அவருக்கு ஆயுள் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, இன்று (01)…

நவம்பர் இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் !!

கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு, நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் தொகுதி வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (01) தெரிவித்தார். இலங்கைக்கு…

தன்னியக்க வான்கதவுகள் திறந்து மூடிக்கொண்டன !!

மலையகத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக, விக்டோரியா நீர்த்தேகத்தின் தன்னியக்க வான்கதவுகள் இரண்டும் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் திறந்துகொண்டனர். சுமார் நான்கரை மணிநேரம் நீரை ​வெளியேற்றியதன் பின்னர், அவ்விரண்டு…

அரசாங்க சொத்துக்களை வாங்கிய புலம்பெயர் இலங்கையர்கள் !!

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளது. பன்னிபிட்டிய…

பொலிஸ் சார்ஜன் அடித்து கொலை: 14 பேர் கைது !!

அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொதுமக்கள் தாக்குதலில் படுகாயமைடைந்த பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார் என்று கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம்…

பிரியமாலி விவகாரம்: பொரளை தேரர் கைது !!

பாரிய பண மோசடி குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி செய்த நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது…

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது செல்லத்துரை…

வெள்ள நீரில் கழிவுகளை வீசும் விஷமிகள் ; இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள அயலவர்கள்!!…

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் , கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது மழை காலம் ஆரம்பித்ததுள்ள…

இஸ்லாம் பாடப் புத்தகங்களை விநியோகிக்க பணிப்பு!!

இஸ்லாம் பாடப் புத்தகங்களை அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், பாடப் புத்தகங்களில் எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினுடைய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும்…

கண்டி – மாத்தறை கடுகதி ரயில் தடம் புரண்டது !!

கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் கடுகதி புகையிரத சேவை கொழும்பு மற்றும் மருதானைக்கிடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சாரி விலைகள் அதிகரிப்பு: மாற்று ஆடை தாருங்கள் !!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் ஆகக் கூடுதலான விலைகளை கொடுத்து சாரியை கொள்வனவு செய்யமுடியாது. ஆகையால், சாரியை கட்டுவதிலும் ஒசரியை கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர் என இலங்கை ஆசிரியர்…

கோட்டாபயவின் தோல்விக்கு நாமலே காரணம்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்‌ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் நேற்று…

மனைவியை பகிர்ந்து வீடியோ எடுத்த கணவன்!!

தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அவ்விருவரும் படுகையறையில் இருந்தபோது, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில்…

யாழில். 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன!!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 11 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் தமது…

ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு!!

ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது , ஆலயத்தினுள் செல்வதற்காக…

இலங்கையைச் சூழ வளிமண்டலத் தளம்பல்நிலை !!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

வரவு செலவுத் திட்டத்தின் இரகசியம் இதுதான்… !!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு 43,200 கோடி ரூபாயும், கல்விக்காக 50,400 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார். இது தவிர பாதுகாப்புச்…

பொம்மைவெளியில் ஹெரோயின் விற்கும் பெண்ணை பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!!

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மாத்திரம் இன்றி விநியோகமும் அதிகமாக நடைபெறுகின்றன.…

இராஜாங்க அமைச்சர் வழக்கில் இருந்து விடுதலை!!

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2019 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக…

எழுதப் படிக்க தெரிஞ்சவங்கள உடனே வேறு உலகத்துக்கு அனுப்பும் 8000 வயசான எகிப்து மாமன்னன்!!…

எழுதப் படிக்க தெரிஞ்சவங்கள உடனே வேறு உலகத்துக்கு அனுப்பும் 8000 வயசான எகிப்து மாமன்னன்