;
Athirady Tamil News

தனிநபர் சுதந்திரமா? சமூக ஒழுக்கமா? – கொழும்புப் பாடசாலைச் சர்ச்சையும் சில யதார்த்தங்களும்

0

கொழும்பு – 10 இல் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில், 2025/2026 கல்வியாண்டில் தலைமை மாணவர் தலைவராக நியமிக்கப்பட்ட மாணவனுக்கும், அதே பாடசாலையில் கற்பிக்கும் 3 ஆசிரியைகளுக்குமிடையில் இருந்த பாலியல் ரீதியான உறவு தொடர்பில் வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக, ஒரு சம்பவம் நாட்டில் புகைய ஆரம்பித்திருக்கின்றது.

19 வயதான குறித்த மாணவன், அவ்வப்போது அந்த பாடசாலையில் கற்பிக்கும் பெண் ஆசிரியர்களுடன் வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு, அந்த வீடியோ அழைப்புகளில் அவர்கள் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டதாகவும், அப்போது பதிவு செய்ததாக சொல்லப்படும் வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் தற்போது பல விவாதங்கள் தொடங்கியுள்ளது.

சம்மந்தப்பட்ட பாடசாலை இதுவரைக்கும் இந்த விடயம் தொடர்பில் வாய் திறக்கவே இல்லை.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ அழைப்பு சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் குறித்த பாடசாலையின் அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் மற்றும் சமூக ஆய்வாளர் சிந்தன தர்மதாச தன்னுடைய முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் அவர், “மாணவர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான கதையில் நாம் சொல்ல வேண்டியது இதுதான்.. அந்த ஆர்வம் பற்றி நமக்கும் தெரியும்.. அப்படிப்பட்ட ஆசிரியர்களைப் பற்றி நாம் அனைவரும் கனவு கண்டிருக்கிறோம்.. நம் காலத்திலும் இப்படியான அதிர்ஷ்டசாலிகள் இருந்திருக்கிறார்கள்.. பாலியல் ரீதியான பொறாமையில் இவர்கள் மீது நாம் கல்லெறிய வேண்டாம்.. அந்தப் பாடசாலையே பிரச்சினையை தீர்க்கட்டும்”, என்று பதிவிட்டிருக்கிறார்

உண்மை தான், யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

ஆசிரியைகள் மீது மாணவன்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு என்பது புதிது அல்ல, அது இன்று தோன்றிய பழக்கம் அல்ல.

ஆனால் இன்று இந்த சம்பவம் இந்த அளவுக்கு புகைகிறது என்றால் அதற்கு காரணம், சம்பவம் தொடர்பான வீடியோ கசிந்தது தான்.

மற்றபடி சம்பவம் ஒன்றும் புதிதல்ல.

ஆசிரியை மீது மாணவனுக்கு ஈர்ப்பு, காதல் ஏற்படுவது தவறா? அல்லது சரியா? என்ற விவாதத்துக்கு அப்பால் இங்கு பேச வேண்டிய வேறு விடயங்கள் இருக்கிறது.

பருவ வயதில் இருக்கும் பிள்ளைகள், அதாவது தரம் 8 இற்கு மேற்பட்ட வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு, பருவ வயதிற்கான உள ரீதியான, உடல் ரீதியான உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். அவற்றை கட்டுப்படுத்த அவர்கள் பக்குவப்பட்டிருக்க மாட்டார்கள்.

தமது கல்வியை முடித்து விட்டு, ஆசிரிய பணிக்கு வரும் 25+ வயதில் இருக்கும் ஆசிரியைகள் மாணவர்களோடு அதிக நட்பாக இருக்க முயல்வது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது, என்பதே யார்த்தமான உண்மை.

ஆண் ஆசிரியர்கள், பெண் ஆசியர்கள் என்றெல்லாம் இல்லை. இது இரு பாலினருக்கும் பொருந்தும்.

ஆசிரியர்களின் வயது, இளமையான தோற்றம், அவர்கள் நட்பாக பழகும் விதம் இவைகள் அனைத்துமே மாணவர்களின் மனதில் ஆசிரியர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட காரணமாய் அமைந்து விடுகிறது. ஏனென்றால் இந்த பருவத்தில், கற்பனை கதைகளில் உருவாகும் திரைப்படங்களை பார்த்தே உணர்வுகள் கிளர்ந்தெழும் போது இப்படியான ஈர்ப்பு சாதாரணம்.

ஆசிரியர்-மாணவர் காதல் கதைகள், திருமண கதைகள் எல்லாம் நம் சமூகத்தில் புதிதல்ல. இப்படியான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான ஈர்ப்பு என்பது காலம் காலமாக எல்லாப் பாடசாலைகளிலும் நடக்கும் ஒரு மறைமுகமான, ஆனால் சாதாரணமான விடயம்.

ஆனால் எப்போது இவை பிரச்சினையாக உருவெடுக்கிறது என்றால், அது பொதுவெளிக்கு வரும் போது தான்.

தற்போது கொழும்பு பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் சர்ச்சையாகி விசாரணைக்கு வர காரணம் அது தான்.

இப்போது பரவலாக ஒரு பழக்கம் இருக்கிறது, ஒருவரது தனிப்பட்ட விடயங்களை குறிப்பாக இருவருக்கிடையில் இருக்கும் பாலியல் ரீதியான Privacy நடத்தைகளை வீடியோ எடுத்து, அதை பல முறை ரசிப்பது. ஒருவரது தனிப்பட்ட Privacy வீடியோவை மூன்றாம் நபர் பார்ப்பது.

வீடியோ மூலம் பாலியல் இன்பத்தைப் பெறுவது இப்போது சாதாரணமான ஒன்று.

இப்படியான வீடியோக்கள் கசியும் போது நெருப்பு புகைகின்றது.

இப்படியான வீடியோக்கள், பாடசாலை, குடும்பம், அலுவலகம் போன்ற கட்டமைப்புகளுக்கு களங்கம் விளைவிக்கினறது.

கொழும்பு பிரபல பாடசாலை சம்பவம் கூட, ஒர் இளைஞன் மற்றும் யுவதிகளுக்கிடையிலான தனிப்பட்ட விடயம் தான், ஆனால் இப்போது வீடியோ கசிந்தது தான் பிரச்சினை

இருவருக்கிடையில் இருக்கும் உறவு, மூன்றாம் தரப்பினரிடையே போவது தான் பிரச்சினை.

மற்றபடி, இந்த சம்பவத்தை சமூக சீர்கேடு என்றும், ஒழுக்கம் இல்லை என்றும் விவாதிக்கிறவர்கள் யாரென்று பார்த்தால், தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற வக்கிரத்திலும், பொறாமையிலும் கல்லெறிகிறவர்கள் தான்.

இந்த பாடசாலை சம்பவத்தில் கூட, குறிப்பிட்ட மாணவன் 18 வயதை பூர்த்தி செய்த Adult. அதனால் இதில் பிழை கண்டுபிடித்து. அந்த மாணவன் மற்றும் ஆசிரியைகளின் Character இனை Blame பண்ணுவது சரியா?

சுய ஒழுக்கம் என்பது மிக அவசியம். அது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களை பொறுத்தது. மற்றவரின் ஒழுக்கத்தை நாம் வரையறுக்க முடியாது.

காதல், நட்பு, உறவு, காமம் இதுவெல்லாம் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் அழகான விடயம். மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் இவை அழகானவை.

எது எவ்வாறாயினும், பாடசாலை கட்டமைப்புக்கு வந்த பிரச்சினையை அவர்களே தீர்க்கட்டும். ஏனென்றால் இந்த சம்பவம் பாடசாலை வளாகத்தில் நடக்கவில்லை.

அத்துடன், தரம் 8 இன்று பிறகு உயர்தரம் வரையிலான மாணவர்களை கையாள்வது முழுக்க முழுக்க ஆசிரியர்களின் கைகளில் தான் இருக்கிறது. ஆசிரியர் கண்டிப்பை காட்ட வேண்டும். மாணவர்களிடம் தேவையற்ற நட்பு பாராட்டுவதை தவிர்க்க வேண்டும், என்பது என்னுடைய கருத்து

ஆசிரியர் ஆசிரியராக மாத்திரம் இருக்க வேண்டும். மாணவர்களின் நடத்தை சற்று பிசகினாலும் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இப்படி வீடியோக்கள் வரத்தான் செய்யும்

இறுதியாக இச்சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களையோ அல்லது மாணவர்களையோ பிழை சொல்ல முடியாது.
பெற்றோராக ஆசியர்களை பார்க்கும் மாணவர்களும், தன் குழந்தைகளாக மாணவர்களை பார்க்கும் ஆசிரியர்களும் வாழும் சமூகம் தான் நாங்கள்.

இந்த சம்பவம் அவர்களது தனிப்பட்ட விடயம். அந்த Privacy இனுள் மூன்றாம் தரப்பினர் எட்டிப்பார்ப்பது பிழை என்பதே என்னுடைய கருத்து.

இச்சம்பவம் தொடர்பான உங்களுடைய கருத்து என்ன?

பிரதி – Sabeena Somasuntharam

You might also like

Leave A Reply

Your email address will not be published.