சுவிஸ் கிஷாந்த் அவர்களின் பிறந்தநாளில், பயன்தரு நல்லின மரக்கன்றுகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)
கிஷாந்த் அவர்களின் பிறந்தநாளில், பயன்தரு நல்லின மரக்கன்றுகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)
#############################
யாழ் சரவணையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச்சில் வசிப்பவர்களும் புளொட் தோழருமான பாபு என அழைக்கப்படும் சித்திரவேல் ஹேமா தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன் கிஷாந்த் தனது பதினெட்டாவது பிறந்த நாளில் செக்கட்டிப்புலவு கிராமசேவகர் பிரிவில் செல்வா நகர் கிராமத்தின் சுற்றுப்புர கிராமங்களில் வாழும் மாணவ மாணவியர்களுக்கு நல்லின பழமர நாற்றுக்களை வழங்கி கொண்டாடினார்.
செல்வாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மண்டபத்தில் மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி விஜயகாந்தன் ரேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சுவிசில் வசிக்கும் செல்வன் கிஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்த நாள் கேக் வெட்டி பாட்டுப் பாடி கொண்டாடப்பட்டது.
இதன் போது பெருமளவு மாணவர்களும், பெற்றோர்களும், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள், தாய்மார் சுகாதார சேவை சங்கத்தின் உறுப்பினர்களும், ஸ்ரீமுத்துமாரி ஆலயத்தின் பரிபாலன சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்ட.துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நல்லின பழமரக் கன்றுகளையும் வழங்கி வைத்தார்கள்.
வெறுமனே களியாட்ட நிகழ்வாக கிஷாந்த அவர்களுடைய பிறந்தநாளைக் கொண்டாடாமல் சுவிசில் பிறந்து வளர்ந்த கிஷாந்த் தன்னுடைய பூர்வீகத்தின் சொந்தங்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக் நல்லின பழமரக் கன்றுகளை வழங்கி ஒவ்வொறு மாணவரும் எதிர்காலத்தில் நற்கனி கொடுக்கும் மாணவர்களாக நல்ல மனிதர்களாகவாழ வளர வேண்டுமென வாழ்த்தி வணங்கினார்.
முன்னதாக தனது பிறந்தநாளில் பம்பைமடு புதிய கற்பகபுரத்தில் வசிக்கும் வயோதிபர் ஒருவர் விபத்து காரணமாக வலது காலை இழந்து உயிரிழையின் பங்களிப்புடன் செயற்கை காலினை பொருத்தி ஓரளவு நடமாடிய நிலையில், காலப்போக்கில் போடப்பட்ட செயற்கை காலும் பழுதடைந்து நடக்க முடியாத நிலையில் அதனை மாங்குளம் உயிரிழைக்கு போய் சிகிச்சை பெற போக்குவரத்துக்கான செலவு செய்ய போதிய வசதி இல்லாத காரணத்தினால் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் உதவி கோரி விண்ணப்பம் செய்திருந்த நிலையில் செல்வன் கிஷாந்த அவர்களின் பிறந்த நாள் கொடுப்பனவாக முதியவரின் கால் சிகிச்சைக்காக மாங்குளம் உயிரிழைக்கு போய் வருவதற்கு தேவையான நிதியுதவியை கொடுத்துதவினார். இவ்வாறு கிஷாந்த அவர்களுடைய பிறந்த நாளில் பல்வேறு தானதருமங்களை செய்து வருவது விசேடமாக குறிப்பிடத்தக்கது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்…
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
01.05.2021













































“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1