;
Athirady Tamil News

சட்டத்தரணிகளின் காரைச் சுற்றி வளைத்து கொலை மிரட்டல் ; இறுதியில் நேர்ந்த கதி

0

சட்டத்தரணிகளை குற்றவியல் ரீதியாக மிரட்டியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான இரண்டு சட்டத்தரணிகள்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும் தாக்கியுள்ளதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கொலை மிரட்டல்
சட்டதரணிகள் தங்கள் வாகனத்தில் புறப்படும்போது, நுகேகொடை கம்சபா சந்திக்கு அருகில் வீதியை மறித்து, காரைச் சுற்றி வளைத்து, கொலை மிரட்டல் விடுத்து, வாகனத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மிரிஹான பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, இன்று (01) அதிகாலை, மாதம்பே – கஜுலந்தவத்தை பகுதியில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் மாதம்பே, கஜுலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த, பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.