அமரர் ச.புஸ்பராணி அவர்களின் நினைவை முன்னிட்டு, அன்னையர்களுக்கு உணவு வழங்கல்.. (படங்கள்)
அமரர் ச.புஸ்பராணி அவர்களின் நினைவை முன்னிட்டு அன்னையர்களுக்கு உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அவர்களின் 5ஆம் ஆண்டு திவசத்தை முன்னிட்டு அன்னையர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
##################################
யாழ் நல்லூர்பதியை பிறப்பிடமாகவும் நாவற்குழி தச்சன்தோப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அவர்களின் ஐந்தாமாண்டு சிவப்பேறு திவச தினத்தில் அன்னாருடைய இளைய மகனும், சுவிஸ் தூணில் வசிப்பவருமான திரு சங்கர் சச்சிதானந்தன் அவர்கள் தனது குடும்பத்தின் சார்பாக வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா ஆச்சிபுரத்தில் உள்ள கிராமத்தில் வாழ்கின்ற அன்னையர்களுக்கு விசேட உணவு வழங்கி அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அம்மா அவர்களின் ஐந்தாமாண்டு திவசம் அனுஸ்டிக்கப்பட்டது.
இவ்வாறான விசேட தினங்களில் வழங்கப்படும் “புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்பில்” தாயகத்தில் வாழும் உதவிகள் தேவைப்படும் உறவுகளுக்கு ஆறுதல் தரும் பல்வேறு நடவடிக்கைகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கடந்த வருடங்களிலிருந்து முன்னெடுத்து வருவது தெரிந்ததே.
இதற்கான புலம்பெயர் சமுகத்தின் ஆதரவு நாளுக்குநாள் பெருகிக் கொண்டு வருவது தாயகத்தில் வாழும், உதவி தேவைப்படும் மக்களுக்கு ஆறுதலாய் உள்ளது..
அந்தவகையில் சுவிஸ் நாட்டில் தூண் மாநிலத்தில் வசிக்கும். திரு.சங்கர் சச்சிதானந்தன் அவர்கள் தனது தாயாரான அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அம்மா அவர்களின் ஐந்தாமாண்டு திவசத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் ஆச்சிபுர கிராமத்தில் வயோதிபத் தாய்மார்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
12.05.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1