;
Athirady Tamil News

பூமணி அம்மாவின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள்)

0

பூமணி அம்மாவின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள்)
##################################

புங்குடுதீவில் பிறந்து சுவிஸில் அமரத்துவமடைந்த அமரர் மார்க்கண்டு புனிதவதி (பூமணி) நினைவாக அமரர் நித்தியானந்தகுமார் (அன்ரிஅப்பா) குடும்பம், கைலாசநாதன் ( குழந்தை) குடும்பம், பாலமுருகன் ( கோபி) குடும்பம், வஜிகரன் ( கரன்) குடும்பம் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் தாயகத்தில் கொரோனா தொற்றுநோய் காரணமாக நாளாந்த வருமானத்தை இழந்து அடுத்தவேளை உணவுக்காக அந்தரப்படும் உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தனர்.

வாழும் போது இந்த மண்ணையும் மக்களையும் நேசித்தவர்களால் மரணித்தும் மக்களை மறக்காது அறிய பணி செய்யும் அவர்களின் அயல்வீட்டு உறவுகளின் சமூகப் பணி போற்றத்தக்க செயலாகும்..

புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்தாலும் தாய் நாட்டையும் தன்னினத்தையும் மறக்காது வாழும் மனிதம் உள்ள மனிதர்களினால் மட்டுமே இவ்வாறான துன்பத்தில் இருக்கின்ற போதும் (இன்றையதினம் நடைபெறும் பூமணி அம்மாவின் இறுதியாத்திரையின் போது) தாய் நாட்டு மக்களின் வேதனையை புரிந்து கொண்டு அதனை போக்கும் வகையில். அமரத்துவமடைந்த பூமணி அன்னையின் நினைவாக, அன்னையின் இறுதிப் பயணததில் வவுனியா இராசேந்திரபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக பொன்னாவரசன் குளம் ஐம்பது வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் சில குடும்பங்கள் தங்களுக்கு கணவர் இல்லையென்றும் தங்கள் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிட்டு இரண்டு நாட்களாகிறது என கண்ணீர் மல்க தொலைபேசி வாயிலாக உதவி கேட்டபோது உடனடியாக அமரர் மார்க்கண்டு புனிதவதி அன்னையின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை இராசேந்திரம் குளம் விக்ஸ்காடு என அழைக்கப்படும் கிராமத்து மக்களுக்கு வீடு வீடாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையில் கொரோனா இடர்கால முகாமைத்துவ சேவை தொடர்பாக அரச உத்தியோகத்தர் கிராமத்திற்கு வருகை தந்த காரணத்தினால் மக்களை பிறிதொரு இடத்தில் வைத்து உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பூமணி அம்மா எனும் அமரர் மார்க்கண்டு புனிதவதி அவர்களுக்கு, இவ்வரிய செயலை செய்த அயல்வீட்டு உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆத்மார்த்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
21.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.