;
Athirady Tamil News

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் “கல்விக்கு கரம் கொடுப்போம்” உதவி.. (வீடியோ, படங்கள்)

0

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் “கல்விக்கு கரம் கொடுப்போம்” உதவி.. (வீடியோ, படங்கள்)

திரு. ‘அம்பிகாபதி கலைச்செல்வம்’
அகவை ஐம்பது கண்டுவிட்டீர்..
மனதில் இன்னும் குழந்தை தான்
இன்னும் ஐம்பது ஆனாலும்
சிரிப்பில் நீங்கள் மழலை தான்
பச்சைப்பிள்ளை பாசம் உண்டு
உதவி செய்யும் நேசம் உண்டு

முதல் பாதியைப் போலவே
உங்கள் வாழ்க்கையின்
அடுத்த அரை நூற்றாண்டும்
அற்புதமாக இருக்கட்டும்..
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்.

யாழ்.சரவணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான சிவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.அம்பிகாபதி கலைச்செல்வம் அவர்களின் ஐம்பதாவது “பொன்விழா” பிறந்த தினம் தாயகத்தில் மூன்று தினத்துக்கு முன்னர் பிறந்தநாள் வாழ்த்துப் பாடி, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது நீங்கள் அறிந்ததே.

யாழ்.சரவணையைச் சேர்ந்த “டெக்ரர்காரர் சின்னத்தம்பி” என அன்புடன் அழைக்கப்படும் அமரர்.திரு.கார்த்திகேசு அம்பிகாபதி திருமதி.அம்பிகாபதி தயாநிதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், சுவிஸில் வசிக்கும் “சிவா” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும், திரு.அம்பிகாபதி கலைச்செல்வம் அவர்களின் ஐம்பதாவது “பொன்விழா” பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மனைவி தர்ஜினி அவரது மகன் சரண், அவரது மகள் யஷ்ணவி ஆகியோரினால் வழங்கப்பட்ட நிதியில் தாயக உறவுகளுக்கான உதவி வழங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் மூன்று தினத்துக்கு முன்னர் கொண்டாடப்பட்டது நீங்கள் அறிந்ததே. அந்நிகழ்வில் கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளும் பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

அத்துடன் பொன்விழா பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.சிவா “கல்விக்கு முன்னுரிமை” கொடுத்து வாழ்பவர் என்பதினால் அவரது விருப்பத்துக்கு இணங்க, மட்டக்களப்பு மாவட்ட செங்கலடியைச் சேர்ந்த வெள்ளை எனும் திரு.கிருஷ்ணபிள்ளை வியஜேந்திரன் அவர்களின் மூத்த புதல்வியின் தொழில் முறைக் கல்விக்கான செலவுக்கென ஒருதொகை நிதியும் இன்றையதினம் இரண்டாவது நிகழ்வாக வழங்கப்பட்டது.

மடடக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வதியும் வெள்ளை எனும் திரு.கிருஷ்ணபிள்ளை விஜயேந்திரன் என்பவர் தனது நிலைமையை விளங்கப்படுத்தி மகளின் தொழில் முறைக் கல்விக்கான செலவுக்கென ஒருதொகை நிதியை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் எழுத்து மூலம் கோரி இருந்தார். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நீண்டகால உறுப்பினர் என்பதினால் இவரது கோரிக்கையை அவ்வமைப்பின் உபதலைவர்களில் ஒருவரான திரு.கேசவன் எம்மிடம் விண்ணப்பித்து இருந்தார்.

மேற்படிக் கோரிக்கையை சுவிஸில் தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் “சிவா” என அன்புடன் அழைக்கப்படும் திரு.அம்பிகாபதி கலைச்செல்வம் அவர்கள் கவனத்துக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கொண்டு சென்றதும், அவரின் மனைவி தர்ஜினி அவரது மகன் சரண், அவரது மகள் யஷ்ணவி இதனை வழங்கி வைக்குமாறு, அவர்கள் தமது நிதிப் பங்களிப்பை வழங்கி வைத்து மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது. இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான திரு.பொன் செல்லத்துரை (தோழர்.கேசவன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இன்றைய நாளில் சுவிஸில் தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் “சிவா” என அன்புடன் அழைக்கப்படும் திரு.அம்பிகாபதி கலைச்செல்வம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை,

அவரது பிறந்த நாளை முன்னிட்டு முதல்கட்டமாக தாயக உறவுகளின் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தமைக்காகவும், பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கி வைத்தமைக்காகவும், இன்றையதினம் இரண்டாம்கட்டமாக தொழில் முறைக் கல்விக்கான செலவுக்கென ஒருதொகை நிதிப் பங்களிப்பை வழங்கிய அவரது பிள்ளைகள், மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

05.09 2022.

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் “கல்விக்கு கரம் கொடுப்போம்” உதவி.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.