“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 26வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 26வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
################################
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன் அண்ணா” என அன்புடன் அழைக்கப்பட்ட “மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி” தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திஆறாவது நினைவாண்டு தாயகத்திலே உணர்ச்சிபூர்வமாக நினைவு கூறப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புலம்பெயர்ந்து வாழும் தோழர்கள் சிலரின் கூட்டுநிதிப் பங்களிப்பில் தாயக உறவுகளுக்கு அமரர் தோழர் மாணிக்கதாசன் நினைவாக பெறுமதியான உலருணவுப் பொதிகள், இன்றைய நாளில் கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது.
மண் விடுதலைக்காக தமிழீழ வரலாற்றில் தொடக்ககால போராளியாக, போராட்ட தலைமைகளின் நம்பிக்கைக்குரிய போராளியாக, பயமே தெரியாத தளபதியாக, இளைஞர்கள் பலர் இவரின் மந்திரப் புன்னகைக்கு கட்டுப்பட்டு அணிஅணியாக தாயக மண்மீட்பு போராட்டத்தில் இணைந்து மாபெரும் இயக்கத்தின் படையினை வழிப்படுத்தும் தளபதியாக மண் விடுதலைக்காக வாழ்ந்த வேளையில்,
இந்திய இலங்கை உடன்படிக்கை ஒப்பந்தத்தை ஏற்று ஆயுத ஒப்படைப்பு செய்து யாருக்காக போராட புறப்பட்டோமோ அந்த மக்களின் நல்வாழ்வுக்காக அரசியல் களப்மணியில் காத்திரமான பங்களிப்புகளை மேற்கொண்டிருந்த போது நயவஞ்சகமாக உயிர் பறிக்கப்பட்டதின் இருபத்திஆறாவது ஆண்டினை அவரோடு வாழ்ந்த தோழர்கள் இன்று இடம்பெயர்ந்து புலம்பெயர் நாடுகளில் வசித்தாலும் தளபதி மாணிக்கதாசன் அவர்களின் நினைவு நாளில் அவரையும் அவருடன் மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் நினைவுதினத்தை தமது பங்களிப்புடன் தாயக மக்களின் துயர்துடைக்கும் நல்ல பணியினை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்றைய நாளில் வவுனியா கிராமமொன்றில் வசதியற்ற நிலையில் வாழும் குடும்பங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய இணைப்பாளர்கள் தெரிவு செய்து அவர்களுக்கு “தளபதி மாணிக்கதாசன், தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் நினைவாக” உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் மரணித்த போராளிகளின் திருவுருவப் படங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு தேவாராபாராயணம் பாடப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டது.
வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர், வயோதிபர்கள், நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி இன்றைய நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்* வேண்டுகோளுக்கு இணங்க தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி” தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவரோடு மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்திஆறாவது நினைவாண்டு முன்னிட்டு சின்னப்புதுக்குளம் கிராம பிரிவில் உள்ள வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கபட்டது.
முதல் நிகழ்வாக தோழர் மாணிக்கதாசன்,தோழர் இளங்கோ,தோழர் வினோ நினைவாக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி ஒன்றிணையும், அத்தோடு தீபராதனையும் காட்டப்பட்டது.
வவுனியா சின்னப்புதுக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நந்தினி காளிதாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் கிராம உத்தியோகத்தர் திருமதி வபித்திரா ரமேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.குகசெல்வன் துவாரகன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிகழ்வில், நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடியான சூழ்நிலை காரணமாகவும் நாளாந்த சாதாரண வாழ்வுநிலை மாற்றமடைந்து அடுத்தவேளை உணவுக்கு அங்கலாய்க்கும் நிலமை விரைவில் உருவாகும் சாத்தியக்கூறு காணப்படும் நிலையில் அமரர் தோழர் மாணிக்கதாசன் அவர்களது நினைவு நாளினை முன்னிட்டு வழங்கப்பட்ட உலருணவுப் பொதி மிகவும் முன்னேற்றகரமான செயல்வடிவமாகும்.
“வீரமக்களாகிய” இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, “வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கான உதவிகள்” போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான முழுமையான நிதி உதவியை புளொட் சுவிஸ் தோழர்களான செல்வபாலன் (சொலத்தூண்), ரமணன் (ரப்பேர்ஸ்வில்), தோழர்.அன்ரன் (சூரிச்), தோழர். சுவிஸ்ரஞ்சன் ஆகியோருடன், புளொட் பிரான்ஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் தயாளன் ஆகியோர் பங்களித்து இருந்தனர்.
மேற்படி நிகழ்வுகளுக்கு நிதிப்பங்களிப்பு செய்த புலம்பெயர்ந்து வாழும் புளொட் தோழர்களுக்கு தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மதிப்புமிகு நன்றியினையும் வாழ்த்தினையும் பெருமதிப்புடன் தெரிவித்துக் கொள்கிறது.
அதேவேளை அமரத்துவமடைந்த தளபதி தோழர் மாணிக்கதாசன்.. மற்றும் தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகிய கழக கண்மணிகளுக்கு தாயக உறவுகளுடன் இணைந்து வீரவணக்க அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
02.09.2025
“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 26வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ)


















































“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos