வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!!
பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அங்கீகரித்து சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 93 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் கிடைத்துள்ளன.
அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.