;
Athirady Tamil News

’எந்த மதமானாலும் புரிதல் வேண்டும்’ !!

0

மக்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், சரி எது பிழை என்பதை தெரிவு செய்யும் அறிவும் புரிதலும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

படல்கமயில் 10 வயது சிறுவனின் அண்மையில் மரணமடைந்தமை தொடர்பில், நேற்றையதினம் (16) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மக்கள் தாங்கள் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மதத்துக்குள்ளேயே எது சரி எது பிழை என்பதைத் தெரிவுசெய்யும் அறிவும் புரிதலும் மக்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.

நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கையின் மூலம் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதாகக் கூறும் பலர் உள்ளனர் எனவும் இதைப் புரிந்து கொள்ளும் ஒரு பெரியவருக்கு சுதந்திரமான விருப்பத்துடன் செய்தால், அது அவர்களைப் பொறுத்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, குறிப்பிட்ட இந்த சம்பவத்தில், கவனக்குறைவால் சிறுவன் உயிரிழந்துள்ளான் எனவும் அவன் உயிரிழந்த பின்னரும் அவர்கள் அமைதியாக இருந்தமையே பிழை என்றும் குறிப்பிட்டார்.

சிறுவன் மீண்டும் உயிர்த்தெழுவான் என்று குடும்பத்தினர் நம்பியமையால் தான் அவர்கள் மரணத்தை 3 நாட்கள் இரகசியமாக வைத்திருந்தனர் எனவும் அது தொடர்பான விசாரணை இன்னும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

படல்கம பிரதேசத்தில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததையடுத்து, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரில் தந்தையும் பாட்டியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தாயார் தொடர்பில் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.