;
Athirady Tamil News

நாட்டை இந்தியாவுடன் இணைத்து விடுமாறு கூறிய விவசாயி!!

0

ஆளும் கட்சி நாட்டை நடாத்த முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடாத்த முடியாது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிப்பதுடன், நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற காட்சிகள் இன்றைய தினமும் பதிவாகியது. பெற்றோல் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசை காணப்படுகின்ற போதிலும், தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு பெற்றோல் மக்களிற்கு கிடைக்கின்றது.

ஆனால் டீசல் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுகின்றது. கொண்டு வரப்படும் டீசல் மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் டீசலை பெற்றுக்கொள்ள நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக உழவு இயந்திரங்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், கொள்கலன்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மக்கள் அரசு மற்றும் எதிர்கட்சி தொடர்பில் விசனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆளும் கட்சி நாட்டை நடாத்த முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடாத்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க கருத்தினை வெளியிட்டுள்ளார்

இதேவேளை, காலபோக செய்கையில் பாரிய நட்டம் தமக்கு ஏற்பட்டதாகவும், சிறுபோகத்தில் ஈடு செய்யலாம் என எண்ணிய போது தற்பொழுது எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பசளை தட்டுப்பாடும், எரிபொருள் தட்டுப்பாடும் தமக்கு பெரும் சவாலாக காணப்படுவதால், எதிர்காலத்தில் விவசாயத்தை முழுமையாக கைவிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.