;
Athirady Tamil News

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘கூகுள் மெப்‘; மகிழ்ச்சியில் பயனாளர்கள் !!

0

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் அம்சங்களில் கூகுள் மெப் (Google Map) சேவையும் அடங்கும்.

இச்சேவை மூலம் எமக்கு தெரியாத அல்லது அதிக பரிச்சயம் இல்லாத இடங்களுக்கு எம்மால் செல்ல முடிவதோடு, போக்குவரத்தையும் இலகுவாக மேற்கொள்ள முடிகின்றது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் மெப்பினை பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தனது பயனர்களுக்காக, தமது சேவைகளை அவ்வப்போது புதுப்பித்து வரும் கூகுள் நிறுவனமானது தற்போது கூகுள் மெப்பில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கூகுள் மெப்பில் நீங்கள் தேடும் வழிகளில் இருக்கும் டோல்கேட் கட்டணங்களை(அதிவேக நெடுஞ்சாலைக் கட்டணங்கள்) தெரிந்துகொள்ளும் வசதியை அளிக்கவுள்ளதாகவும், அவ்வாறு நாம் கட்டணம் செலுத்த வில்லை என்றால் அதற்குப் பதிலாக மாற்று வழியைக் காட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் அம்சமானது அண்ட்ரொய்ட் மற்றும் iOS சாதனங்களில் இம் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் ஆரம்பத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு இச் சேவை அளிக்கப்படும் எனவும், விரைவில் பல நாடுகளுக்கு சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.