;
Athirady Tamil News

புளொட் சுவிஸ் தோழரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம் திறப்பு (படங்கள், வீடியோ)

0

புளொட் சுவிஸ் தோழரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம் திறப்பு (படங்கள், வீடியோ)

வவுனியாவில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பெயரிலான “உமாமகேஸ்வரன் வீதி” வீதிக்கான மாதிரி வரைபடம் புளொட் சுவிஸ் தோழரான லெனின் எனும் திரு. திருமதி செல்வபாலன் மனோகரி (சசி) தம்பதிகளின் இருபத்தைந்தாவது திருமண நாளை முன்னிட்டு அவர்களின் பிள்ளைகளான ஈழதர்சன் யாழிசன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் நிறுவப்பட்டது. பெருமளவிலான நிதிச் செலவில் மேற்படி “உமாமகேஸ்வரன் வீதிக்கான” மாதிரி வரைபடம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம் இன்றையதினம் 12/04/2022 காலை 11 மணியளவில், புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தம்பா ரவி, தோழர் சிவா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.