;
Athirady Tamil News

1500 சட்டங்களை அகற்றியுள்ளேன்: பிரதமர் மோடி உரை..!!

0

இந்தியாவின் 15-வது குடிமுறை அரசுப்பணி தினத்தை முன்னிட்டு அரசு அதிகாரிகளின் மத்தியில் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாம் என்ன செய்தாலும் அது உள்ளூர் அளவிலும், கிராம அளவில் பயன் தரும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும் தான் நமது நாட்டின் முதன்மையான விஷயமாக கருத வேண்டும். நாம் எந்த அமைப்பை உருவாக்கினாலும், எந்த முடிவை எடுத்தாலும் அது நமது ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துமா என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேளுங்கள். இந்தியா தான் முதலில், தேசம் தான் முதலில் என்று நமது பணிகள் இருக்க வேண்டும்.

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நமது சமூக மனநிலையும் மாற வேண்டும். முன்பு இந்துக்கள் இறந்தவர்களின் உடலை கங்கைக்கரையில், சந்தன கட்டையில் எரியூட்டுவதையே விரும்பினர். இப்போது அவர்கள் தான் மின் தகன முறையை ஆதரிக்கின்றனர். இது தான் மாறும் சமூக மனநிலை என்பது. மாறி வரும் காலத்திற்கு ஏற்ப சட்டங்களும் மாற வேண்டும்.

நான் பதவியேற்ற முதல் 5 ஆண்டுகளில் காலத்திற்கு உதவாத சட்டங்களை நீக்கியுள்ளேன். இந்தியாவில் பல நூறு சட்டங்கள் மக்களுக்கு சுமையாக இருந்தது. நான் பிரதமரான பின் முதல் 5 வருடங்களில் 1,500 சட்டங்களை அகற்றியுள்ளேன்.

இந்த 8 வருடங்களில் பல மாற்றங்கள் வந்துள்ளது. அனைத்தும் இந்தியர்களுக்கு உதவும் மாற்றங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.