;
Athirady Tamil News

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்- 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு..!!

0

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனை நாய்கள் சில துரத்தியுள்ளது. இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கு சாக்கு பையால் மூடி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கினான். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் சிறுவனனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். முதற்கட்டமாக சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டான். பின் சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அது பலனின்றி உயிரிழந்தான்.

இந்த துயரச் செய்தியை அறிந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளதோடு, சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஹோஷியார்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஹிருத்திக் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். சிறுவனின் குடும்பத்திற்கு கடவுள் வலிமையை தர வேண்டும். குடும்பத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது. இந்த துயர நேரத்தில் அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.