தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தங்கரத உற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தங்கரத உற்சவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் தங்கரத உற்சவம் இடம்பெற்றது.
மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , வெளிவீதியுலா வந்தார்
எதிர் வரும் 11ஆம் திகதி காலை 09 மணிக்கு தேர் திருவிழாவும் , மறுநாள் 12ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் , மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.





