;
Athirady Tamil News

பங்கு சந்தை முறைகேடு- ரூ.3.12 கோடி அபராதத்தை செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ்..!!

0

கடந்த 2013-ம் முதல் 2016 ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையான (என்எஸ்.இ.) நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார்.

அப்போது என்.எஸ்.இ. அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குசந்தை தரகர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தேசிய பங்கு சந்தை விவரங்களை ஏஜண்டு களால் முன்கூட்டியே கசிய விட்ட முறைகேடு பண மோசடி செய்ததாக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த மாதம் 6-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

திகார் சிறையில் இருக்கும் அவரிடம் அமலாக்கத்துறையினர் நேற்று வாக்குமூலம் பெற்றனர். பண மோசடி தடுப்பு சட்டத்தின் குற்றவியல் பிரிவுகளி கீழ் இந்த வாக்குமூலம் பெறப்பட்டது.

பங்கு சந்தை விவரங்களை வெளிநபரிடம் பகிர்ந்ததால் சித்ரா ராமகிருஷ்ணா ரூ.3.12 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அபராதத்தை செலுத்த அவர் தவறிவிட்டார்.

இந்த நிலையில் ரூ.3.12 கோடி அபராத தொகையை செலுத்த அவருக்கு செபி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

15 தினங்களுக்குள் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதம் செலுத்த தவறினார் என்றால் சொத்துக்கள் முடக்கப்படும் என்று சித்ரா ராம கிருஷ்ணாவுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.