;
Athirady Tamil News

88 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் – மன்சுக் மாண்டவியா..!!

0

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது.

இதற்கிடையே, நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை தற்போது 193 கோடியைக் கடந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் 88 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி உள்ளனர் என சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் கூறுகையில், இந்தியாவில் வயது வந்தோரில் 88 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்தி உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.