;
Athirady Tamil News

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகா- மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பரிந்துரை..!!

0

மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து இன்று முதல் 20-ந் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்-ஐ நடத்துகின்றன. இந்த ஆண்டு 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 600 மாணவர்கள் இதில் கலந்து கொள்கிறாரகள்.

இந்நிலையில்,மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தேசிய யோகா ஒலிம்பியாட்- 2022 மற்றும் வினாடி வினா போட்டியைத் தொடங்கி வைத்தார். மத்திய கல்வி இணை மந்திரி சுபாஷ் சர்க்காரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மந்திரி பிரதான், பள்ளி பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்குமாறு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு பரிந்துரைத்தார்.

கொரோனா தொற்றுக்குப் பிந்தைய கால பாதிப்புகளை போக்கவும், இயல்புத்தன்மையை கட்டமைக்கவும், மனித இனத்திற்கு யோகா பேருதவியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்து வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி முதல் 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்‌. வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பள்ளிகளில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தவும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.