;
Athirady Tamil News

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் நிதியுதவி !!

0

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஜப்பான் அரசு சுமார் 244 மில்லியன் ரூபாய் நிதியுதவியினை வழங்கியுள்ளது.

ஜப்பான அரசின் இந் நன்கொடை மூலம் டாஸ் கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நன்கொடை வழங்கலுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (28) காலை கிளிநொச்சி – முகமாலை பகுதியில் அமைந்துள்ள DASH செயற்பாட்டு பகுதியில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் DASH இன் நிகழ்ச்சி முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டு கைச்சாத்திட்டனர்.

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் DASH இனால் 15 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டிருந்தன. இதில் ஜப்பானிய அரசின் GGP உதவித் திட்டத்தினூடாக 6.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.