தேசிய மாணவர் படையணியினால் யாழில் இரத்த தானம்!! (படங்கள்)
தேசிய மாணவர் படையணியின் இருபதாவது படைப்பிரிவின் 11வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை இரத்த தான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டது.
யாழ்.மாவட்ட தலைமை செயலகத்தில் கட்டளை தளபதி மேஜர் நிரோஷான் ரத்னவீர தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் 511வது,512வது படைபிரிவு ,51வது காலட் படையணி ஆகியவற்றின் சிவில் ஒழுங்கமைப்பு அதிகாரிகள், படைப்பிரிவின் அதிகாரிகள், மாணவச் சிப்பாய்கள், நலன்பிரிவுகள், பழைய மாணவ சிப்பாய்கள் என 100 பேர் இரத்த தானம் செய்தனர்.



