பரந்தனில் இடம்பெறும் எங்கட புத்தகங்கள் கண்காட்சி விற்பனை.!! (படங்கள்)
நேற்றைய தினம் இல 42, 6ஆம் ஒழுங்கை, குமரபுரம், பரந்தன் என்னும் முகவரியில்
மறைந்த சமாதான நீதவான் திரு இராமு தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக
‘தர்மம் சமூக மேம்பாட்டு நிலையமும்’, திருமதி தர்மலிங்கம் சின்னம்மா நினைவாக தர்மம் மேம்பாட்டு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா நூலகமும்’ அவரது குடும்பத்தினரால் திறந்துவைக்கப்பட்டது.
இந்தநிகழ்வினை ஒட்டி அம்மா நூலகத்தில் நேற்றைய தினம் எங்கட புத்தகங்கள் கண்காட்சி விற்பனையும் இடம்பெற்றிருந்தது. நேற்றும் இன்றும் இடம்பெற்ற எங்கட புத்தகங்கள் கண்காட்சி விற்பனையினை மேலும் நீடிக்கும்படி, பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கல் மற்றும் பலர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அதன்படி எங்கட புத்தகங்கள் கண்காட்சி விற்பனை மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே நேற்றும் இன்றும் கண்காட்சியை தவறவிட்டவர்கள் நாளை தவறாமல் கண்காட்சியை காண வாருங்கள்.