;
Athirady Tamil News

சங்கானையில் நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

0

சங்கானை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயல்படும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
சங்கானையில் சந்தேகத்துக்கிடமான வீட்டினை சோதனையிட்டபோது வீட்டின் பின்புறமாக நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த 150 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதோடு 35 வயதுடைய சந்தேகர் நபர் ஒருவரும் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.