;
Athirady Tamil News

பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை! வடமாகாண சிரேஸ்டபிரதி பொலிஸ் மா அதிபர்!! (வீடியோ)

0

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய வட மாகாண ஆளுநரின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

தற்பொழுது வடக்கு மாகாணத்தில் அனைவராலும் பேசப்படுகின்ற விடயமாக போதைப் பொருள் விடயம் காணப்படுகிறது போலீசார் வடக்கு மாகாணத்தில் போதை ஒழிப்பு செயற்பாட்டிற்கு பல்வேறுபட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அதாவது பாடசாலைகளில் விழிப்புணர்வு செயற்பாடு மற்றும் தனியார் வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்குரிய பல்வேறுபட்ட முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக பொலிசாரால் மாத்திரம் போதை பொருளை கட்டுப்படுத்த முடியாது குறிப்பாக வடக்கில் உள்ள மக்கள் வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்புனை வழங்க வேண்டும்.

அதாவது உங்களுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் வைத்தியராக பொறியியலாளராக வரவுள்ளவர்கள் அவ்வாறான ஒரு சமுதாயத்தினை இந்த போதைப் பொருளுக்கு அடிமையாக விடுவது பெரும் குற்றமான விடயமாகும்.

எனவே பொலிசார் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் ஒழிப்பிற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார்கள்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 61 பொலிஸ் நிலையங்களிலும் ஒவ்வொரு நாளும் போதைப் பொருளோடு தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேபோல சிவில் சமூககுழுக்களின் மூலம் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது அந்த ஒத்துழைப்பு மேலும்பல்மடங்கு தேவையாக உள்ளது வடக்கு மாகாணத்தில் பொலிசார் போதை ஒழிப்பிற்கு மாத்திரமல்லாது போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டல் போன்ற பல்வேறுபட்ட செயற்திட்டங்களில் பொலிசார் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.