;
Athirady Tamil News

நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன – மத்திய மந்திரி ஜெய்சங்கர்..!!

0

தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்தப் பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது. வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்துறை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரெயில்களில் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி இன்று நடந்தது. சமூகம் மற்றும் தேச கட்டமைப்பில் கோவில்களின் பங்கு என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். வணக்கம் காசி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது: உலகளவில் இந்தியாவின் எழுச்சி காணப்படுகிறது. நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன. அவை நமது வாழ்வின் வழியாகும். நம்பிக்கை மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான இடமாக மட்டும் கோயில்கள் இருக்கவில்லை. சமுதாய நலக் கூடங்களாக இருந்தன. மக்கள் ஒன்று கூடுவதற்கான இடமாகவும், கலையை ஊக்குவிப்பதாகவும் இருந்தன. இந்திய பாரம்பரியத்தைக் கொண்டிருப்பவையாக கோயில்கள் இருந்தன. அவை நமது வாழ்க்கையின் பாதையாகவும் இருந்தன. என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.