;
Athirady Tamil News

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைப்பு……!! (படங்கள், வீடியோ)

0

கடந்த 5 ம் திகதி அன்று பருத்தித்துறை நகரசபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்ட வேளை ஒரு மேலதிக வாக்கினால் அது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19/12/2022. அன்று மீண்டு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்க்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளை சிறிது நேரம் முன்னராக தவிசாளர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தவிசாளர் இன்மை காரணமாக வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் உள்ளூராட்சி உதவி அணையாளர் செ.பிரணவநாதன் தலமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம் பெறுவதற்க்கான கூட்டம் கூட்டப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் உட்பட நால்வரும் , தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவருமாக ஐவர் சமூகமளித்திருந்தனர்.

இந்நிலையில் உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் மேலதிகமாக அரை மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது.

சற்று நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மதனி நெல்சன், சுயேட்சை குழு உறுப்பினர் துலோசனா எ சமூகமளித்தனர்.

அவ்வாறிருந்தும் 15 உறுப்பினர்களை கொண்ட குறித்த பருத்தித்துறை நகரசபையில் 8 பேர் கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்க்கு சமூகமளிக்க வேண்டும். ஆனால் ஏழிபேர் மட்டுமே சமூகமளித்திருந்த நிலையில் ஒரு கோரம் இன்மையால் குறித்த தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அறிவித்ததுடன் பிறிதொரு திகதி அறிவிக்கப்படும் என்று கூட்டம் முடிவுறுத்தப்பட்டது

மேலும் இன்றைய தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அறுவரும், ஈழமக்கள் ஜனாநாயக கட்சி உறுப்பினர்கள் இருவருமாக எட்டுப்பேர் சமூகமளிக்கவில்லை என்பதுடன் பருத்தித்துறை பொலீஸ் நிலைய உப பரிசோதகர் சேந்தன் தலமையிலான பொலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.