;
Athirady Tamil News

பணவீக்கத்தால் தள்ளாடும் உலகம் !!

0

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், உலக நாடுகளில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும் ஏறக்குறைய அனைத்து குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் அதிக உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக உணவுப் பணவீக்கத்தால் ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தெற்காசியா, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவிக்கிறது.

வங்கியின் தரவுகளின் அடிப்படையில், உலகில் உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக சிம்பாப்வே காணப்படுவதுடன், அங்கு உணவுப் பணவீக்கம் 321 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி உலக வங்கி நவம்பர் மாதம் வெளியிட்ட பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 74 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் 7ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக லெபனானும் மூன்றாவது நாடாக வெனிசுவேலாவும் பெயரிடப்பட்டுள்ளதுடன், முறையே 203, 158சவீத உணவுப் பணவீக்கத்தால் அந்நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

102 சதவீத பணவீக்கத்தைக் கொண்டுள்ள துருக்கி ஐந்தாம் இடத்திலும் 92 சதவீத பணவீக்கத்தை கொண்டுள்ள ஆர்ஜன்டீனா ஐந்தாம் இடத்திலும் உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

6 ஆம் 8ஆம் 9ஆம் 10ஆம் இடங்களை முறையே ஈரான், ருவாண்டா, சுரினாம், லாவோஸ் ஆகியவை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.