உலக மண் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி!! (PHOTOS)
உலக மண் தினத்தை முன்னிட்டு கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பாடசாலை மாணவர்கள் மத்தியில் எதிர்காலத்தை நோக்கி சுற்றுசூழல் கழகமும் பாடசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து பல்வேறு போட்டி நிகழ்வுகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று பாடசாலை அதிபர் k. திலீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மத்திய கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் க.பத்மானந்தன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம்,மற்றும் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகளும் கலந்து கண்டனர்.












