;
Athirady Tamil News

தமிழ் அரசு கட்சியின் வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்!!

0

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, வேட்பாளர் அற்புதம் சற்குணதாஸ் தெரிவித்தார்.

இவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

திடீர் மரணவிசாரணை அதிகாரியும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய இவர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை இன்று (30) நடத்தினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புனிதவளன் நகர் வட்டாரத்தில் போட்டியிடுகின்றேன். தான் தேர்தலில் போட்டியிடுவது பல கட்சியினருக்கு விருப்பமில்லாத சூழ்லிலை காணப்படுகின்றது அதனால் தன்மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன. 1970 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து தமிழ்த் தேசியத்தினை நேசித்தவன் அன்றில் இருந்து இன்றுவரை இலங்கை தமிழ் அரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் பயணித்தவன் என்றார்.

தேர்தல் வேட்பாளராக அறிமுகமான பின்னர் கடந்த 25 ஆம் நாள் வரை தொலை பேசியில் இரண்டு தடவைகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். வெளியில் வந்தால் கொலை செய்வோம் என்று தொலைபேசியின் ஊடாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்றார்.

அவர்களின் தோல்வி பயம் காரணமாக இந்த மிரட்டல்களை அவர்கள் விடுகின்றார்கள். இந்த மிரட்டல் தொடர்பில் கடந்த 25.01.2023 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.