;
Athirady Tamil News

சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி!!

0

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். தொழிலாளி. இவருக்கும், காடுகோடியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து பெண்ணின் வீட்டினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள், சுரேஷ் மீது பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுரேசின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு, குறுந்தகவல்கள் வந்துள்ளன. அதில் போலீஸ் நிலையத்தில் சரண் அடையுமாறும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயந்து போன சுரேஷ், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். முன்னதாக அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் தனது சாவுக்கு காரணம் இளம்பெண் தான் எனவும், தான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், அவர் விஷத்தை குடித்தும், பீர் பாட்டிலால் தலையில் தன்னை தானே தாக்கி கொண்டதும் அதில் பதிவாகி இருந்தது.

அந்த வீடியோ காட்சிகளை பார்த்து உடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சர்ஜாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.