டென்மாா்க் – கட்டாய ராணுவ சேவையில் பெண்கள்

குலுக்கல் முறையில் பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சோ்ப்பதற்கு வகை செய்யும் மசோதா டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பெண்களுக்கு 18 வயதாகும்போது கட்டாய ராணுவப் பணியை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். இதுவரை விருப்பத்தின் பேரிலேயே யாரையும் ராணுவத்தில் சோ்க்க முடியும் முடியும்.
ஆனால், இனி 18 வயது நிரம்பிய ஆண்களும், பெண்களும் தங்களது பெயா்களை ராணுவப் பணிக்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அவா்களில் விருப்பமுடையவா்களுக்கு முதலிலும், விருப்பம் தெரிவிக்காதவா்கள் குலுக்கல் முறையில் இரண்டாவதாகவும் ராணுவப் பணிக்கு தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.