;
Athirady Tamil News

மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

0

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உச்சவம் இடம்பெற்றுவரும் நிலையில், ஆனி உத்தர நாளான இன்று அதிகாலை வேளை விஷேட பூசை இடம்பெற்றது.

இதன்போது, சிறுவன் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி விட்டு அதனருகில் நின்ற போது அருகில் இருந்த மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான சென்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.