;
Athirady Tamil News

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை விமர்சித்தமை – ரஷ்ய மாணவிக்கு நேர்ந்த நிலை!

0

உக்ரைனின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பினை ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவ்வாறு விமர்சிப்பவர்களை அதிபர் புதின் தலைமையிலான அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது.

இந்தநிலையில், 20 வயதான ரஷ்ய பல்கலைக்கழக மாணவி ஒருவர் ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவிற்கு எதிராக ரஷ்ய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் நகரை சேர்ந்த 20 வயதான ஒலேஸ்யா எனப்படும் மாணவி, உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவை விமர்சனம் செய்யும் வகையில் தனது நண்பர்கள் பதிவிட்ட பதிவுகளை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதனால் அந்த மாணவியை உடனடியாக கைது செய்த ரஷ்ய காவல்துறையினர், வீட்டு சிறையில் வைத்துள்ளதுடன், அவரது காலில் ‘எலக்ட்ரானிக் டேக்’ பொருத்தி அவரது ஒவ்வொரு நகர்வையும் அவதானித்து வருகின்றனர்.

பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும், ரஷ்ய படையினரை இழிவுபடுத்தியதாகவும் குறித்த மாணவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த மாணவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.