;
Athirady Tamil News

ரஷ்யாவில் தொடரும் மர்ம மரணங்கள் – துலங்காத உண்மைகள்!!

0

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நண்பரான மெரினா யாங்கினா மாடி கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித் துறைக்கு தலைமை அதிகாரியாக செயல்பட்ட மெரினா யாங்கினா(Marina Yankina), செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் புதன்கிழமை காலை மெரினா யாங்கினா இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

குடியிருப்பின் 16 வது மாடியில் மெரினாவின் உடைமைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு அவர் வசிக்கவில்லை என்றும், அது கணவரின் குடியிருப்பு என்றும் மற்றுமொரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மெரினா யாங்கினா ரஷ்யாவின் ஐந்து புவியியல் படைப்பிரிவுகளில் ஒன்றான மேற்கு இராணுவ மாவட்டத்தின் நிதி இயக்குநராக இருந்து வந்துள்ளார்.

கடந்த பெப்ரவரியில் உக்ரைனின் தாக்குதலை தொடங்கியதில் இருந்து அதன் தளபதிகளை புடின் பலமுறை மாற்றியுள்ளார். இதற்கிடையில் தற்போது அவரது இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய மேஜர் ஜெனரல் விளாடிமிர் மகரோவ் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்த சில நாட்களுக்கு பிறகு, மெரினா யாங்கினா மரணம் ஏற்பட்டுள்ளது பல சர்ச்சைக்குரிய கருத்த்துக்களை எழுப்பியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.