;
Athirady Tamil News

இது வலி, துக்கம், நம்பிக்கை, ஒற்றுமை நிறைந்த ஆண்டு ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெறுவோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சூளுரை!!

0

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்த்து ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் அப்பாவி பொதுமக்கள், ராணுவத்தினர் உட்பட ஏராளமானோர் பலியாகி விட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் சின்னா, பின்னமாகி விட்டன. இந்த போரில் உக்ரைன் கொடுத்த பதிலடியில் ரஷ்ய வீரர்களும் உயிரிழந்தனர். போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இதையொட்டி போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடங்களில் உக்ரைனியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தலைநகர் கீவ்வில் இருந்து காணொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, “நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் ஒவ்வொரு நாள் காலையிலும் கண் விழிக்கிறோம். ஒவ்வொரு நாளுக்காகவும் நாம் போரா வேண்டியுள்ளது. ஆனால் இந்த நீண்ட, நெடிய போரிலிருந்து நாம் மீண்டெழுந்துள்ளோம். இந்த ஆண்டு நமக்கு வலி, துக்கம், நம்பிக்கை, ஒற்றுமை நிறைந்த ஆண்டு. ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் மக்களை நாங்கள் கைவிட மாட்டோம். நாங்கள் எங்கள் மக்களை விட்டு கொடுக்க மாட்டோம். எங்கள் நிலங்களை மீட்போம். இந்த போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று சூளுரைத்தார்.

* ஐநா வாக்கெடுப்பு: புறக்கணித்த இந்தியா
உக்ரைனில் நீடித்த, நிலையான அமைதியை கொண்டு வர ரஷ்ய படைகள் உக்ரைனிலிருந்து உடனே வௌியேற வேண்டும் என ஐநாவின் சிறப்பு அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து விட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், எதிராக 71 நாடுகளும் வாக்களித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.