தரமற்ற மருந்தால் பறிபோன உயிர் ; மனைவியின் மரணத்திற்கு நீதிகோரும் கணவர்!
கொழும்பு தொற்று நோய்கள் நிறுவனம் (IDH) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஷானிகா சமரபால (37)வின் மரணத்துக்கு தரமற்ற மருந்துகளே காரணம் என அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளம் தாயார் 11 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் தனது மனைவியின் மரணத்திற்கு நீதிகோரி நேற்று (23) அதுருகிரிய பொலிஸில் கணவர் முறைப்பாடளித்தார். இறந்த பெண்ணின் கணவர், ஹோமாகம, ஹபரகடாவைச் சேர்ந்த பி. சானக மதுசங்க கூறுகையில்,
டெங்கு காய்ச்சலுக்காக தனது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட மருந்து வழங்கப்பட்ட உடனேயே தனது மனைவியின் இதயம் நின்றுவிட்டது என்றும், அவரது இதயம் சுமார் ஆறு முறை நின்றாலும், சிகிச்சை அளிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், இந்த விஷயத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மதுசங்க கூறினார்.
“நான் என்ன செய்தாலும், இப்போது எனக்கு மனைவி இல்லை. என் குழந்தைகளுக்கு அம்மா இல்லை. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இளம் மனைவியை இழந்து வாடும் கணவர் வலியுறுத்தினார்.