;
Athirady Tamil News

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது!!

0

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. மார்ச் மாதம் 17-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 19-ந்தேதி இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது. 20-ந்தேதி கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை சின்னசேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

24-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கருட வாகன வீதிஉலா, 25-ந்தேதி காலை அனுமன் வாகன வீதிஉலா, யானை வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 28-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. ேமற்கண்ட வாகன வீதிஉலா காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணனுடன் இணைந்தும் வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.