பக்கத்து வீட்டு திருமணத்தில் வைத்த DJ இசை.., சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பக்கத்து வீட்டு திருமணத்தில் வைத்த DJ இசையால் 15 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி உயிரிழப்பு
இந்திய மாநிலமான பீகார், ரஷித்பூராவை சேர்ந்தவர் பிங்கி. இவரது அருகில் உள்ள வீட்டில் நடைபெற்ற திருமண விருந்தில் இரவு 11 மணியளவில் DJ இசை வைக்கப்பட்டுள்ளது.
அப்போது, அந்த இசையை கேட்டு பிங்கி மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு ஒரு மணி நேரம் சிகிச்சை மேற்கொண்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல், சிறுமி உயிரிழந்ததற்கும் இது தான் காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை கூறுகையில், “மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போல் நடித்தனர். பின்னர் ஒரு கதையை உருவாக்குகிறார்கள்” என்றார்.
இதனால் மருத்துவமனையின் முன்பு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோஷத்தை எழுப்பினர். இதையடுத்து பொலிஸார் அவர்களை அமைதிப்படுத்தினர்.