உருத்திர சேனையினால் திருவள்ளுவரின் திருவுருவம் வெளியீட்டு வைப்பு!! (PHOTOS)
உருத்திர சேனையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை(26) மாலை இடம்பெற்றது.
இதன்போது திருவள்ளுவரின் திருவுருவப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக சிவசேனை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் சிறப்பு விருந்தினராக வலம்புரி பத்திரிகை ஆசிரியர் ந.விஜயசுந்தரம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீ சற்குணராஜா உட்பட சைவசமய ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.












