;
Athirady Tamil News

விபத்தில் பலியான நான்கு தமிழ் இளைஞர்கள் ; கண்ணீரில் மூழ்கிய கிராமம்

0

விசுவமடு பிரதேசமே நேற்று சோகத்தில் மூழ்கியது ஒரு பிரதேசத்தில் இருந்து 4பேரின் உடலங்களும் மக்களின் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி வழங்கப்பட்டு விசுவமடு சந்தியிலிருந்து 12ம் கட்டை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

கோர விபத்து
விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்தனர்.

விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்துமே நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.