மூத்த தம்பதியரின் உயிரை பறித்த மின்சாரம் ; தீவிரமாகும் விசாரணை
கேகாலையில் வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுவல பகுதியில் உள்ள காணி ஒன்றில் மின்சார வேலியில் சிக்கி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக காணியில் பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கியே கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹுனுவல, துல்ஹிரிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கணவனும் 58 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.