;
Athirady Tamil News

மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை – இன்றைய தங்க நிலவரம்!

0

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,304 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 183,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,600 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,940 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 21,030 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,080 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.