;
Athirady Tamil News

3,900 மெற்றிக் டன் எரிவாயுவுடன் இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு கப்பல்

0

நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவந்த ‘FRANCOIS’ கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்ததுடன், அந்த எரிவாயுத் தொகுதியை தரை இறக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிய நான்காவது கப்பலான ‘CORINTHIAN’ எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எரிவாயுத் தொகுதிகள் கிடைக்கப் பெற்றதும், நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் சீரமைக்கப்பட்டு, எவ்வித தடையுமின்றி சந்தைக்கு வழக்கம்போல் அத்தியாவசிய எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என நுகர்வோருக்கு லிட்ரோ நிறுவனம் மேலும் உறுதியளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.