;
Athirady Tamil News

யாழில் கசிப்பு ஆராய்ச்சி செய்த ஆணும் பெண்ணும் கைது

0

யாழ்ப்பாணம் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை தெல்லிப்பளை பொலிஸார் நேற்று (19) கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 30 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, 95250 மில்லி லீற்றர் கோடா, காஸ் சிலிண்டர் 2, கம்பிச்சுருள் 1, அடுப்பு மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.