;
Athirady Tamil News

புலம்பெயர்வோர் என சந்தேகிக்கப்படும் சடலங்கள் – கனடா அமெரிக்க எல்லையில் பரபரப்பு..!

0

கனடா அமெரிக்க எல்லையில், நேற்று மாலை ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கனடாவும் அமெரிக்காவும் புலம்பெயர்வோர் எல்லை கடக்கும் பகுதி ஒன்றை மூடியதைத் தொடர்ந்து, வேறு வழியாக புலம்பெயர்வோர் எல்லை கடக்க முயற்சி செய்யலாம்.

அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை 5.00 மணியளவில், கனடா அமெரிக்க எல்லையில், கியூபெக்கிலுள்ள St. Lawrence நதியோரமாக உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முயற்சியில், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். உயிரிழந்தவர்கள் புலம்பெயர்வோரா என்பது உறுதிசெய்யப்படவில்லை.

உயிரிழந்த ஆறுபேரில், அந்தக் குழந்தைக்கு மட்டும் கனடா கடவுச்சீட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதை இப்போதைக்கு தெரிவிக்கமுடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எதனால், எப்போது உயிரிழந்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.