;
Athirady Tamil News

சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இல்லாத அதிகாரம்

0

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கூட கிடையாது. அது கம்பனிகளுக்கே உண்டு என்று பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், கடந்த காலங்களில் எங்களை அவமானப்படுத்தினார்கள். இன்று லயத்திற்கு 10 பட்டதாரிகள் இருக்கின்றார்கள்.

இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல. மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் இவர்.

இவர் இதற்கு முன்னரான காலத்தில் தலவாக்கலையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரணில் விக்ரமசிங்க ஆயிரம் ரூபா வேதனத்தைப் பெற்றுத் தருவேன் என்று கூறினார். அதன் பின்னர் அவர் கைவிரித்துச் சென்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.