;
Athirady Tamil News

தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் குவிந்துள்ள மருத்துவ கழிவுகள்!

0

தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக வீதி ஓரங்களில் பொலித்தீன் பைகளால் சுற்றப்பட்டு பாரியளவு குப்பைகள் வீதி ஓரங்களில் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ள நிலையில் அவை காற்று காரணமாக முழு பகுதியிலும் நிறைந்து காணப்படுவதுடன் கால்நடைகளும் அவற்றை உட்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ கழிவுகளும் முறையற்ற விதமாக கொட்டப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மாவட்டத்தின் பிரதான வீதியில் இவ்வாறான குப்பைகள் நீண்ட காலமாக கொட்டப்பட்டுவருவதை மன்னார் பிரதேச சபை கவனத்தில் கொள்ளாமல் குப்பைகளை அகற்றாமல் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, பொலித்தீன் பைகள் பிளாஸ்ரிக் போத்தல்கள் அதிகளவு கொட்டப்பட்டு காணப்படுகின்ற நிலையில் அவ்வப்போது பெய்யும் மழையின் போது டெங்கு நுளம்புகளும் பெருக கூடிய வாய்புக்கள் காணப்படுகின்றது.

எனவே, குப்பைகளை உரிய விதமாக அகற்றுவதுடன் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது பிரதேச சபை மற்றும் சுகாதார ஊழியர்கள் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொது மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.