;
Athirady Tamil News

இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கில் முட்டைகள் இறக்குமதி !!

0

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (4) வந்தடைந்ததுடன் , அத்தோடு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் தொகை 40 இலட்சம் எனவும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்னும் அடுத்த சில தினங்களில் மேலும் 10 இலட்சம் முட்டைகள் கிடைக்கவுள்ளதாவும் அவை வெதுப்பகங்களுக்கும் உணவகங்களுக்கும் மாத்திரம் விநியோகிக்கப் படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறையின் அனுமதியுடன் அவை களஞசியப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் திணைக்களம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.