கட்டுமான தளத்தில் விபத்தில் பலியான நபர் ; தீவிரமாகும் விசாரணை
வெள்ளவத்தை, 47வது வீதியில் உள்ள கட்டுமான தளத்தில் இருந்த பிரைம் மூவர் வாகனத்தின் சுமார் 500 கிலோ எடையுள்ள சாய்வுப் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
களனி, ஈரியவெட்டிய, எண் 537 ஐச் சேர்ந்த 61 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தால் கட்டுமானத்தில் உள்ள மாடி கட்டிடத்திற்காக கொண்டு வரப்பட்ட பைலிங் இயந்திரத்தை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது திடீரென மூவர் வாகனத்தின் சாய்வுப் பகுதி சரிந்து வாகன உதவியாளர் மீது விழுந்துள்ளது.
இதில் படு காயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.